ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தின் கீழ் இருக்கும் மேலமடைப் பஞ்சாயத்திலுள்ள கருக்காத்தி காலணி கிராம மக்கள், தங்களுக்கான குடிநீர் வழங்கல் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட குடிநீர் சேவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர்.
நாங்களும் ஓட்டு போட்டோம் எனவே மற்ற கிராமங்களைப் போன்று நாங்களும் குடிநீர் வசதியை பெற வேண்டும்,” என்கிறார்கள்.
தற்போது உப்பு தண்ணீரையே குடிக்க வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இது அவர்களுடைய தினசரி வாழ்வில் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறுகின்றனர்
மற்ற அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது, ஆனால் எங்கள் கிராமம் மட்டும் புறக்கணிக்கப்படுவது ஏன்?” என பாரபட்சம் குறித்த கேள்வி எழுப்பியுள்ளனர்.
முடிவில், இந்த நிலையில் மாற்றம் ஏற்பட, கிராமத்திற்குத் குடிநீர் வழங்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.