9000 தேங்காய்களில் உருவான விநாயகர் சிலை..!

கர்நாடகாவில், 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (2ம் தேதி), விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு ‘பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்’, ‘சைக்கிள் ஓட்டும் விநாயகர்’, ‘காளையை அடக்கும் விநாயகர்’, ‘கிரிக்கெட் விளையாடும் விநாயகர்’, ‘நீச்சல் குளத்தில் படகில் செல்லும் விநாயகர்’, ‘ரயில் ஓட்டும் விநாயகர்’ என, வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வீதிகளில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது.அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை பயன்படுத்தி 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.இந்த சிலையை, 70 பக்தர்கள் ஒன்றிணைந்து கடந்த 20 நாட்களாக வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!