இராமநாதபுரம் : டில்லி டால்க டோர உள் விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி டிச.12 முதல் 15 வரை நடந்தது. 7 வயதிற்கு மேல் 14 வயதிற்குட்பட்டோர், சப்-ஜூனியர் மகளிர் 30 கிலோ எடை குமித் தே பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4ம் வகுப்பு மாணவி ரித்யா, தமிழ்நாடு சார்பில் பங்கேற்று இறுதிச்சுற்றில் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்தார். இவரது சகோதரி ரிதன்யா முதல் சுற்றில் வென்று 2 ஆம் சுற்றில் தோல்வியை தழுவினார். சாதனை மாணவியரை பள்ளி தாளாளர் கோகிலா, பள்ளி நிர்வாக அலுவலர் ஜேக்கப், முதல்வர் பிரீத்தா பயிற்றுநர் சசிகுமார், மாநில கராத்தே சங்கச்செயலாளர் அல்தாப் ஆலம், பொறுப்பாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் பாராட்டினர்.

You must be logged in to post a comment.