அகில இந்திய அளவில் பாண்டிச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு கலை அரங்கத்தில் நான்கு நாட்கள் கராத்தே மற்றும் கிக் பாக்ஸிங் (தற்காப்பு கலை) போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுமார் 1600 பேர் கலந்து போட்டியில் பங்கேற்றனர்.
இதில் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் சப் ஜீனியர் மற்றும் சீனியர் போட்டிகளில் 20 கிலோ எடை முதல் 65 கிலோ எடையிலான கராத்தே மற்றும் கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கு பெற்று ஐந்து தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கல பதக்கம் மொத்தம் ஒன்பது பதக்கங்கள் வென்று வந்தனர். பிரசாந்த் கராத்தே போட்டியில் தங்கபதக்கமும், கிக் பாக்ஸிங் போட்டியில் வெண்கலமும் வென்றார். ஹாசினி கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கமும், கராத்தே போட்டியில் வெண்கலமும் வென்றார். அபினவ் கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். அகமது ஜலாலுதீன் கராத்தே போட்டியில் தங்கமும், கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கமும் வென்றார். முகம்மது ஆரிப் புகாரி கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்றார். ஜீவ தர்ஷினி கிக் பாக்ஸிங் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றனர்.
மேலும் பதக்கங்கள் வெல்வதற்கு பயிற்சி அளித்த பள்ளி கராத்தே பயிற்சியாளர் ரென்சி குகன் ஆகியோரை பள்ளி தலைவர் திரு.முகம்மது யுசுப், செயலாளர் திருமதி.சர்மிளா, மாவட்ட மது விலக்கு மற்றும் கலால் கட்டுப்பாட்டு மாவட்ட துணை கண்காணிப்பாளர் முனைவர் திரு. வெள்ளைத்துரை, பள்ளி முதல்வர் திரு. நந்தகோபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









