கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவிலாகும். பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாசிமக திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இக்கோயிலுக்கு வருகை தருவது வழக்கம். இந்த தேர்த் திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவங்கி வைத்தார் கோவை வருவாய் கோட்டாட்சியர் வடக்கு கோவிந்தன், மேட்டுப்பாளையம் தாலுகா வருவாய் வட்டாட்சியர் ராமராஜ், மேட்டுப்பாளையம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அதியமான், திருக்கோயில் அறங்காவலர் தேவ்னந்த் மற்றும் வருவாய் அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவல்துறையினர் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தினை முன்னிட்டு இன்று முதல் 2 நாட்கள் (மார்ச் 12, 13) ஆகிய தேதிகளில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பொது மக்களுக்கு என்று தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
You must be logged in to post a comment.