கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி கண்ணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா இந்த ஆண்டும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பாடல் பட்டிமன்றம் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும் சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஞானசேகரன் கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன்
கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றியதுடன் கிராமப்புற மாணவ மாணவிகள் கல்வி கற்பதற்கு எப்போதும் தான் உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் பள்ளியில் பயிலும் காலகட்டத்தில் பொழுதுபோக்கில் கவனம் செலுத்தாமல் கல்வி கற்பதற்கு முன்னுரிமை செலுத்தி மாணவ மாணவிகள் நல்லவிதமாக தேர்ச்சி அடைந்து அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறியதுடன் கற்ற கல்வி கைவிடாது என்று வாழ்த்துரை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் கல்வித் துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் முக்கிய பிரமுகர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.