நாய் குட்டிக்கு பால் வார்த்த காரைக்கால் கலெக்டர்.

நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சிவப்பு நிற ரேசன் கார்டுதார்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி வீதம் 2 மாதத்திற்கு வழங்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் 21ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த அரிசி வழங்கப்படுகிறது. இதனை பல்வேறு இடங்களுக்கும் சென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா பார்வையிட்டார்.நெடுங்காட்டை அடுத்துள்ள வடமட்டம் அரசு நடுநிலைப்பள்ளியில் இலவச அரிசி போடும் திட்டத்தை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் அர்ஜூன்சர்மா அங்கு 4 நாய்குட்டிகள் பசியோடு சுற்றித் திரிந்ததை கண்டார். ஊரடங்கு நேரத்தில் அந்த நாய் குட்டிகளுக்கு உணவளிக்க நினைத்த கலெக்டர் , நாய் குட்டிகளுக்கு பால் கொடுக்க உத்தரவிட்டார். உடனடியாக அங்கு பாக்கெட் பால் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்த போலீஸார் பாத்திரத்தில் பாலை ஊற்ற , பசியோடிருந்த நாய் குட்டிகள் ஒடி வந்து பாலை குடித்து மகிழ்ச்சியடைந்தன. அதனை பார்த்து மகிழ்ந்த கலெக்டர் அர்ஜுன் சர்மா பசியோடிருந்த நாய்குட்டிகளுக்கு பால் வார்த்த நிம்மதியுடன் காரில் ஏறிச் சென்றார்.ஊரடங்கு நேரத்தில் மனிதர்களே பசியோடு இருந்தாலும் பார்த்தும், பார்க்காதது போல் செல்லும் அதிகாரிகள் மத்தியில் நாய்குட்டிகள்தானே என்று நினைக்காமல் அவற்றின் பசியை போக்கிய கலெக்டரை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!