பெங்களூருவில், குண்டும் குழியுமான சாலையை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, ஓவியர்
ஒருவர் வெளியிட்ட நிலவில் நடக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பாதல் நஞ்சுண்டசாமி. ஓவியரான இவர், பெங்களூருவில் உள்ள குண்டும் குழியுமான சாலை ஒன்றை வித்தியாசமான முறையில் நகரத்தின் உள்கட்டமைப்பு பொறுப்புக்கான பி.பி.எம்.பி (Bruhat Bengaluru Mahanagara Palike) அமைப்பின் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என நினைத்தார்.
இதையடுத்து, மோசமான நிலையில் உள்ள அந்த சாலையை நிலவின் மேற்பரப்பு போன்று ஓவியமாக வரைந்தார். அதில்,
விண்வெளி வீரர்போல் வேடமிட்ட ஒருவர் நடந்து செல்வதுபோல் முப்பரிமாண (3டி) வீடியோ ஒன்றை உருவாக்கினார்.அதை, ‘ஹலோ, பிபிஎம்பி கமிஷனர்’ என்று பெயரிட்டுதனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். நிலவில் மனிதன் நடப்பதுபோல் பார்ப்போர் நம்பும் இந்த வீடியோவை, பகிரப்பட்ட 4 மணி நேரத்தில் 56 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். ஆயிரத்து 400 பேர் லைக் செய்துள்ளனர். 2 ஆயிரத்து 500 பேர் பகிர்ந்துள்ளனர்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









