மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுப்படத்திற்கு நிலக்கோட்டையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடகமேடை அருகே தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தேமுதிகவின் நிலக்கோட்டை (தெற்கு) ஒன்றிய செயலாளர் எம். வெள்ளைச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஏவிஆர்.பழநி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் ஜவுளி ஏ.முருகன் முன்னிலை வகித்தார்.
வந்திருந்த அனைத்து தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சியினர் விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்,அதன் பிறகு நினைவேந்தல் கூட்டமும் நடைப்பெற்றது.
இந்த மலரஞ்சலி நினைவேந்தல் கூட்டத்திற்கு தேமுதிகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர், மாவட்ட அவைத் தலைவர் முத்துக்காளை, மாவட்ட பொருளாளர் மாசானம்,மாவட்ட துணை செயலாளர் ஜெர்மன் ராஜா, மாவட்ட மாணவரனி செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய அவைத் தலைவர் செல்வம், எக்ஸ் அவைத் தலைவர் நம்பிராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அய்யர் பாண்டி,மற்றும் நிர்வாகிகள் வீரனகாளை,அழகுராஜா,பிச்சை,கருப்புச்சாமி, வத்தலகுண்டு நிர்வாகிகள் கருத்தபாண்டி, மணிமுருகன், ஆத்தூர் முத்து, ரெட்டியார் சத்திரம் சுப்பிரமணி, நாகராஜன், ஜெயக்குமார்,மான்சிங், பழநிச்சாமி,கோவை மணி, இருதயநாதன்,நாடாண்டி, ஊராட்சி செயலாளர்கள் அய்யப்பன், லட்சுமணன், மகளிரணி நிர்வாகிகள் ராணி, பாப்பா, உட்பட கேப்டன் மன்ற நிர்வாகிகள். திமுக, அதிமுக, காங்கிரஸ்,விசிக,பாமக, மதிமுக,பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அமமுக,திக, புதிய தமிழகம்,நாதக,தமுமுக,மமக, எஸ்டிபிஐ, மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பொருப்பாளர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் எப்பேர்பட்ட வள்ளல் என்பதை அனைத்து கட்சியினரும் நினைவு கூர்ந்தனர். மேலும் நிலக்கோட்டை வணிகர் சங்கத்தினர்,பூ வியாபாரிகள் மற்றும் கேப்டனின் அபிமானிகள் என ஏராளமானோர் திரண்டு வந்து விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









