மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகனம், காரை வைத்து ஏற்றி கொல்ல முயலும் காட்சிகள் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக பேசி அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வீடியோ காட்சிகள் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி பதிவு எண் இல்லாத கார்களும், வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய கார்களும், சுங்க வரி கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கையாகி வருவதால், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பின்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது போன்ற வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் , கட்டணம் செலுத்த கேட்டுக்கொண்ட போது, இருவருக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்பட்டு வருகிறது. சுங்கச் சாவடி ஊழியர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.