கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் கலாம் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சிகள்..

கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு 25/07/2017 அன்று 37 மீட்டர் துணிப் பதாகையில் ஓவியம் (Banner Painting), அப்துல் கலாமின் தொலைநோக்குப்பார்வை (Abdul Kalam’s Vision) எனும் தலைப்பில் மாணவ குழுமுயற்சியில் உருவாக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம் இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் சார்பில் புதுவையைச் சார்ந்த Assist World Record நிறுவனரும் பல்வேறு உலகசாதனைகளை நிகழ்தியவருமான இராஜேந்திரன் தலைமையேற்று பதாகையினை திறந்து வைத்து மாணவர்களின் கலைத்திறனைப் பாராட்டி ஊக்க உரையாற்றினார். சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகாதேவன் சிறப்புரையாற்றினார். அப்துல் கலாம் இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிகழ்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உறுதுணையுன் இயற்கை வேளாண்மை ஆர்வளர் தீப் சிங் மற்றும் ஃபவுண்டேஷன் தொண்டர்களும் கலந்துகொண்டனர். ஓவியக்குழு மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள் திரளாக வந்திருந்து கண்டுகளித்தனர்.

கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் இராஜேஷ் கிருஷ்ணன் மற்றும் பள்ளி மேலாளர் அபுல் ஹசன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!