பழனியில் கஞ்சா விற்பனை செய்த ஏழு பேர் கைது- கைதானவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பழனி திண்டுக்கல் சாலையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீசார் திடீரென திண்டுக்கல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன், பழனி நகரைச் சேர்ந்த மணிகண்டன், கார்த்திக், நாகேந்திர பிரசாத், முகமது சேக் ,சரவணகுமார் , முகசூரியா ஆகிய ஏழு இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஏழு பேரும் காத்திருந்தது தெரியவந்தது. பிடிபட்ட நபர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









