தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஆறு மூட்டைகளில் கடத்த இருந்த ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான181கிலோ கஞ்சாவை தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி சுங்கத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் அருகே உள்ள கட்டப்பாடு பகுதி கடற்கரை பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 10 மணியளவில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்தின் பேரில் இருட்டில் கடற்கறையோரம் நின்றிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர், அதில் 181கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது இதன் மதிப்பு 27லட்சம் மதிப்பு ஆகும் ,அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளைக் கண்டதும் லாரியில் வந்த இருவர் இருட்டான பகுதியில் தப்பி ஒடிச் சென்றனர் , வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி




You must be logged in to post a comment.