இராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உச்சிப்புளி எல்கைக்குட்பட்ட கடலோர பகுதியான அரிய மான் கடற்கரை பகுதியை கண்காணித்தனர். மேலும் சேதுநகரைச் சேர்ந்த ஜெயக்மார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அங்கு தலா 2 கிலோ வீதம் பேக்கிங் செய்த 98 பொட்டல கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 196 கிலோ எடை கொண்ட கஞ்சா வின் சர்வதேச மதிப்பு ரூ.10 லட்சமாகும். பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களை உச்சிப்புளி காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரிய மான் கடற்கரை பகுதியில் தனி அறையில் பதுக்கிய கஞ்சா பொட்டலங்களை ராமேஸ்வரம் டிஎஸ்பி மகேஷ் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் சம்பந்தமாக கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் இன்று (06.02.2019) காலை முதல் விசாரணையை முடுக்கி விட்டனர். ராமேஸ்வரம் டிஎஸ்பி., மகேஷ் தலைமையில் தனிப்படையினர் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இது தொடர்பான தோப்பு
உரிமையாளரான ஓய்வு தாசில்தார் ஜெயராஜ் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் திருப்புல்லாணி அருகே சேதுநகரில் ஜெயராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராஜ், மண்டபத்தில் வருவாய் துறையில் பணியாற்றியபோது கடத்தலில் ஈடுபடும் இலங்கை அகதிகளுடன் நட்பு இருந்ததும் தெரிய வந்துள்ளது.





You must be logged in to post a comment.