காங்கேயம் அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..

காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தில் காங்கேயம் அரசு மருத்துவமனையில் இறந்த 5 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவருடைய சொந்த ஊரான திருப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திருப்பூர், நல்லிக்கவுண்டர் நகர், புது நகர் 7வது வீதியை சேர்ந்த சந்திரசேகரன் சித்ரா தம்பதியினர் தங்களது 60வது திருமண விழவிற்கு மகன்கள் சசிதரன் 30, இளவரசன் 26 மற்றும் மருமகள் ஹரிவிவித்ரா 30.பேத்தி ஷாக் ஷி (3 மாதம்) குழந்தையுடன் திருக்கடையூர் சென்றுவிட்டு திருப்பூர் திரும்பி வரும்போது வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் மூத்த மகன் சசிதரன் படுகாயங்களுடன் மேல்சிகிச்சைக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் அருகே நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!