ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் மகன் நாகூர்கனி(99). இவர் முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்(ஐஎன்ஏ). நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஏ}வில் சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்திய விடுதலைக்காக போராடியவர். பின்னர் இந்திய சுதந்திரத்திற்க்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். இவர்ருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் அளித்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன், தலைமையில் சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து தியாகியின் உடல் பெருநாழி முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மண்டல துணை வட்டாட்சியர் சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன்.., வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் ராமலெட்சுமி, கிராம உதவியாளர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர். மேலும்

You must be logged in to post a comment.