நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்று இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கியது. முதலில் அப்துல் கலாம் அண்ணணிடம் ஆசிபெற்று அங்கு உணவருந்திவிட்டு அப்துல் கலாம் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து இராமேஸ்வரம் மண்டபம் உச்சிப்புள்ளி வேதாளை வழிpயாக இராமநாதபுரம் அரண்மனை முன்பு சிறிது நேரம் மக்கள் மத்தியில் “உங்கள் வீட்டு விளக்கை அணையவிட மாட்டேன்” என்ற அரசியல் வசனத்துடன் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து பரமக்குடி நோக்கி சென்றார். கமல் பேசுகையில் அவருடைய சொந்த மாவட்டத்திற்கு 40 வருடங்கள் கழித்து வருவதாக கூறினார்.
கமல் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து செல்லும் வழியெங்கும் அவருடைய ரசிகர்கள் மிகவும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பிக்பாஸ் புகழ் ஸ்னேகனும் கமலின் அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிக்விக்கும் வகையில் கலந்து கொண்டார்.
இன்னும் சில மணி நேரங்களில் கமல் அவருடைய அரசியல் கட்சி கொள்கை மற்றும் கொடியினை மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இருந்து அறிமுகப்படுத்தப் போவது குறிப்பிடதக்கது.
புகைப்படத் தொகுப்பு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print



























