மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று (17/12/2018) திண்டுக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் மற்றும் பார்வையாளர்கள் எழுப்பிய பல் வேறு வினாக்களுக்கு பதில் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “காஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை மத்திய அரசிடம் பயந்து கேட்காமல் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசியல் பின்னணி உள்ளது, அது ஸ்டெர்லைட் வேண்டாம் என்பது நோக்கமல்ல, மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நடத்த வேண்டும். மேலும் மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாக தமிழக அரசு இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழக அரசு சுயநலமாக செயல்பட்டு வருகிறது அப்படி இருக்கக்கூடாது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை அவர்களது வாழ்க்கை என்னும் தாழ்வான நிலையிலேயே உள்ளது. அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன, நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் ஆனால் தமிழக அரசு இன்னும் வேகம் காட்டவில்லை. இந்தியாவில் வரி செலுத்துவதில் தமிழகம் இரண்டாவது மாநிலமாக உள்ளது, ஆகையால் மத்திய அரசு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை அரசியலில் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம். டெல்லியில் காங்கிரஸ்உள்ளிட்ட கட்சிகளை சந்தித்தது அவர்களை நெருங்கியதாக அர்த்தம் இல்லை. தேர்தல் நிலைப்பாடு பற்றி நாங்க பின்னர் முடிவு செய்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
செய்தி:- திண்டுக்கல் மாவட்ட நிருபர்..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










