தேனி பெரியகுளம், தென்கரை கிளை நூலகத்தில் கல்விக் கண் அறக்கட்டளையின் 8ம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு, தெய்வத் திரு.தனலட்சுமி ராமச்சந்திரன் நினைவாக, அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணக்கர்களிடம் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு கல்விக் கண் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் செயலர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.வடகரை நூலக வாசகர் வட்ட தலைவர் ஆலிம் M அகமது முஸ்தபா, சூரியநாராயணன், புரவலர் அழ.குருநாதன், நல்லாசிரியர் ஏசி. சிவபாலு, கோபால், பொறியாளர் நித்யானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நல் நூலகர் சவடை முத்து வரவேற்புரையாற்றினார்.விழாவில் புரவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
செய்தி:- A.சாதிக் பாட்சா, நிருபர், தேனி மாவட்டம் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










