குளத்தூரில் பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர் ! 

 இராமநாதபுரம் அருகே உள்ள குளத்தூரில் மிகவும் பழமையான புனிதம் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கடந்த 9 நாளுக்கு முன்பு, காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் பல்வேறு தீபாராதனைகள் விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று அதிகாலை  கோயிலில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி நகரின் முக்கிய வீதி  வழியாக வலம் வந்து வைகை ஆற்றில் சரியாக ஏழு முப்பது மணி அளவில் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் விண்ணை முட்டும் கோஷத்துடன் இறங்கி பக்தர்களுக்கு அருள் அளித்தார். மேலும் அங்குள்ள மண்டகப்படியில் இன்று ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்காக காட்சியளிக்கிறார். பின்பு, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலை வந்து அடைவார்.இந்த சித்திரை திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து வந்திருந்த அனைத்து ஆன்மீகப் பெரியோர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வார வழிபாட்டு கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!