கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி, 29ஆம் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பகல்-இரவு கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 7 முதல் 10 வரை நடைபெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று ஆட்டத்தை சிறப்பிக்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1,00,060, இரண்டாம் பரிசு ரூ.75,060, மூன்றாம் பரிசு ரூ.50,060, நான்காம் பரிசு ரூ.30,060 என பரிசுத்தொகைகள் வழங்கப்படுகின்றன.
இன்றைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான போட்டியை, முன்னாள் கால்பந்து வீரரும் ஸ்ரீ ராகவேந்திரா நிதி நிறுவன உரிமையாளருமான ஏ.டி. ஆறுமுகம் அவர்கள் குடும்பத்துடன் தொடங்கி வைத்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் ஆர்வமுடன் போட்டிகளை கண்டு ரசித்தனர்.
You must be logged in to post a comment.