கலாம் நினைவகத்தின் முன் விழுந்து கிடக்கும் தடுப்பு அரண் கம்பிகள்.கண்டுகொள்ளாத அதிகாாிகள்.

இராமேஸ்வரத்தில்,பேய்க்கரும்பு எனும் இடத்தில் முன்னாள்           குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவிடைத்தை பாா்வையிட வருவதால் நினைவிடத்தின் எதிர்புறத்தில் எண்ணற்ற சிறு சிறு கடைகளும் வாகனங்களும் அப்துல் கலாம் நினைவிடம் வந்த பிறகு உருவாகியுள்ளன.மேலும் வாகனங்களின் எண்ணிக்கையால் அப்பகுதியில் போக்குவரத்து நொிவல் ஏற்படுகின்றன.இதனை ஒழுங்குபடுத்தும் வகையில் போலிசாரால் போி காா்டு எனப்படும் தடுப்பு அரண் கம்பிகள் அமைக்கப்பட்டன.தற்போது அவற்றில் சில துருப்பிடித்தும் கம்பிகள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.இவற்றை போலிசாா் அகற்றததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இவற்றை   அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!