தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் அகாடமியாக கல்வி சேவை ஆற்ற உள்ளதாக தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தென்காசி சிவந்தி நகர் பகுதியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சிறப்புரை ஆற்றினார். செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி தொகுப்புரை ஆற்றினார். தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் வே. ஜெயபாலன் செயற்குழுக் கூட்டத்தில் பேசியதாவது, தெற்கு மாவட்ட திமுக அலுவலகமானது காலை 9 மணி முதல் 11 மணி வரை செயல்படும் என்றும், விரைவில் இது கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நான்கு ஆசிரியர்களை கொண்டு கலைஞர் அகாடமியாக கல்வி சேவை ஆற்றும். கடந்த ஐந்தாம் தேதி 1500 பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைகளினால் வழங்கப்பட்ட மூத்த முன்னோடிகளுக்கான பொற்கிழி தகுதியானவர்களுக்கு விடுபட்டிருந்தால் அவர்களை தேர்வு செய்து வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கப்படும் என செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் பேசினார்.
இச்செயற்குழு கூட்டத்தில் தென்காசி மாவட்ட திமுக சார்பில் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கும் மாவட்ட செயல் இளைஞரணி வீரர்கள் கூட்டத்திற்கும் அனுமதி பெற்று தந்த பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்தும், இருபெரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக புதிய அலுவலகத்தை திறந்து வைத்து 70 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியினை ஏற்றி தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தும், நிகழ்ச்சிகள் நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், இளைஞரணி அமைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தும், தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு கொறடாவுமான கதிரவனின் மனைவி மல்லிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்க பரிந்துரை செய்த முதல்வருக்கும், பொதுச் செயலாளர் துரை முருகனுக்கும் நன்றி தெரிவித்தும், வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி கழகத்தின் முப்பெரும் விழாவினை சிறப்பாக கொண்டாடிடவும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற பாடுபடுவோம் எனவும், விருப்பமில்லாமல் செயல்பட்டு வரும் பாக முகவர்களை மாற்றுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் ஜேசுராஜன், ஷேக்தாவூத், ராஜேஸ்வரன், சாமிதுரை, மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாநில விவசாய அணி இணை அமைப்பாளர் செல்லப்பா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர்ரகுமான், ஆலங்குளம் ஒன்றியக் குழுத்தலைவி எம்.திவ்யா மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் கென்னடி, கனிமொழி, தென்காசி மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் மாரிமுத்து, அமைப்பாளர் டாக்டர் அன்பரசன், தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜேகே. ரமேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ், தென்காசி சுப்பிரமணியன், செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் சாம்பவர் வடகரை மாறன், குற்றாலம் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், வழக்கறிஞர் அணி வேல்சாமி ரகுமான் சாதத், முத்துக் குமாரசாமி, சீனித்துரை, ரவிசங்கர் மகேஷ் மாயவன், பெரிய துரை, தென்காசி 1வது வார்டு செயலாளர் ராமராஜ், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், தொண்டரணி இசக்கிதுரை, தென்காசி நகர பொருளாளர் ஷேக் பரீத், நகர துணைச் செயலாளர் ராம்துரை, குத்துக்கல் வலசை கிளைச் செயலாளர் காசி கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர். கிருஷ்ணராஜா நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









