இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நகர கழக செயலாளர் பசீர் அகமது மற்றும் மாணவரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான் தலைமையிலும் 21-வார்டு கிளைச் செயலாளர்கள் முன்னிலையிலும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
மேலும் 7வது வார்டு கிழை கழக சார்பில் நகர் பொருளாளர் சித்திக் தலைமையிலும் நகர மாணவரணி துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் முன்னிலையிலும் ஏழாவது வார்டு குறிப்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப்பள்ளி அருகில் கலைஞரின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இதில் அவைத்தலைவர் மணிகண்டன், துணைச் செயலாளர் ஜமால் பாரூக்,மற்றும் கென்னடி, முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது, மூர் ஜெயினுதீன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முகம்மது சுஐபு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் எபன் பிரவீன்குமார், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் முத்துவாப்பா, மாவட்ட பிரதிநிதிகள் ஜபருல்லா, மரைக்காயர், மற்றும் கெஜி, அஸ்கர், மூர்ஜெயினுதீன், பயாஸ், நயிம் அக்தர், மரகாப சித்திக்,அஜ்மல் கான் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












