கீழக்கரையில் கலைஞர் பிறந்த தின சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நலத்திட்டங்கள்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 98 -வது பிறந்தநாளை கீழக்கரை நகர் திமுக சார்பில் நகரச் செயலாளர் பசீர் அகமது தலைமையிலும், இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கீழக்கரை விஏஓ அலுவலகம் அருகில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பின்பு கீழக்கரை அம்மா உணவகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் சொந்த நிதியிலிருந்து 3-ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்பு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது கீழக்கரை அவைத்தலைவர் மணிகண்டன், நகர் பொருளாளர் சித்திக், நகர துணை செயலாளர்கள் ஜமால் பாரூக், கென்னடி, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி அமைப்பாளர் காதர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முகம்மது சுஐபு, மாவட்ட பிரதிநிதி மரைக்கா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் கஜேந்திரன், பயாஸ், நயிம், எபன், அல்லா பாக்ஸ், மாணவரணி துணை அமைப்பாளர் மீரான், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!