தென்காசி மாவட்டம் கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சேர்ந்தமரம் நிலைய வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமயிலான சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள், கலந்து கொண்டு அனைத்து நோய்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பாக இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.




நீர், இரத்த பரிசோதனை, ஸ்கேன், ஈசிஜி, எக்ஸ்ரே, இயன்முறை மருத்துவம், தொற்றா நோய்களை கண்டறிதல், கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம், காசநோய் பரிசோதனை, இதயநோய் மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்து, சிகிச்சைகள் வழங்கப்பட்டது. கடையாலுருட்டி மற்றும் சுற்றுபுற கிராமப் பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். 2 நோயாளிகள் மேல் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை பெற்று பயன் அடைந்தார்கள். தென்காசி மாவட்ட காசநோய் அலுவலகம் மூலம் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே உதவியுடன் சளி அறிகுறி உள்ள 51 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.



இம்முகாமில் கடையாலுருட்டி நாதன் டிம்பர் சேர்மநாதன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் கணேசன், சேர்ந்தமரம் மஜிரா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேல்முருகன், இந்து நாடார் நடுநிலைப்பள்ளி நிர்வாகி ஜெயக்கொடி, கடையாலூருட்டி திமுக கிளை செயலாளர் சேர்மன், விஜயன் போஸ்ட் மாஸ்டர், சேர்ந்தமரம் நிலைய மருத்துவ மேற்பார்வையாளர் முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுப்பையா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வகிருஷ்னண், பாலசுந்தரம், ஜெயராம், சுகுமார், விக்னேஷ், சுரேஷ், கிராம செவிலியர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர், மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் குடிநீர் மற்றும் ஒஆர்எஸ் கரைசல் குடிநீர் வழங்கப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சைப் பெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசின் சார்பாக இலவசமாக சத்து உணவு பெட்டகம் வழங்கினார்கள். சேர்ந்தமரம் மஜரா பஞ்சாயத்து தலைவர் ரவி மற்றும் செயலர் இணைந்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர் . வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுப்பையா நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.