கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ ஆகியோர் இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள்.
பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரண பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனை 34 நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், குடிநீர் ஆகியவற்றை 5 முகாம்களுக்கு ஒரு வாகனம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். நிவாரண பொருட்கள் 24 மணி நேரமும்பாதிக்கபப்ட்டபகுதிகளுக்கு தொடர்ந்து அனுப்புமாறு அலுவலர்களை கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் பேராவூரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் கொணடு செல்லப்பட்ட நிவாரண பொருட்களை, பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமஙக்ளுக்கு பிரித்து அனுப்பும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் பெருமக்கள், விரைந்து நிவாரண பொருட்களை வழங்குமாறு அலுவலர்களை கேட்டுக் கொண்டார்கள்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










