கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் துயர் துடைப்பதற்காக ராமநாதபுரத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வேண்டுகோளை ஏற்று இந்த மையங்களில் வருவாய், உணவு பாதுகாப்பு துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் ரூ.4,30,200 மதிப்பில் அரிசி, மளிகை சாமான்கள், துணிகள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சேகரிப்பட்டன.
வருவாய் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் ரூ.5,73,500 மதிப்பில் அரிசி, மளிகை பொருட்கள், தண்ணீர் பாட்டில், துணிகள் சேகரிக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் மாரிமுத்து, அழகப்பா, பாலமுருகன், விஜயகுமார் தலைமையில் திருவாரூர், பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு நான்கு வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழியனுப்பி வைத்தார்.
கோட்டாட்சியர் சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆ. செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணாதுரை, பேரிடர் மேலாண் தாசில்தார் சுரேஷ்குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் சேர்மன் ஹாரூண், டாக்டர் அரவிந்தராஜ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









