கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல் வேறு அமைப்புகள் உதவிக்கரம் நீட்டி வரும் வேளையில் கீழக்கரை ரோட்டரி சங்கமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், போர்வை உட்பட ஏராளமான பொருட்களை 150 குடும்பத்தினருக்கும் மேலாக உதவும் வண்ணம் ₹.75,000/- மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சதக் கல்லூரி பட்டய தலைவர் அலாவுதீன்,கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம்,செயலாளர் ஹசன்,பொருளாளர் முனியசங்கர்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் டாக்டர் ராசீக்தீன்,வக்கீல் கேசவன், நூஹு ஆகியோர் உடனிருந்தனர்.



You must be logged in to post a comment.