கஜா புயலால் பாதித்த நாகபட்டினம் மக்கள் துயர் துடைக்கும் வகையில் ரூ.5,13,900 மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வாகனத்தை இராமநாதபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று (23.11.18) அனுப்பி வைத்தார். புயல் பாதித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள், தன்னார்வலர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டது.
பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்களிப்போடு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. 20.11.18 ல் ரூ.4,30,200 மதிப்பிலான பொருட்கள் திருவாரூக்கும், ரூ.5,73,500 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பட்டுக்கோட்டை பகுதிக்கும், 21.11. 18ல் ரூ.6,80,900 மதிப்பிலான பொருட்கள் திருவாரூக்கும், ராமேஸ்வரம் மீனவர் சங்கம் சார்பாக ரூ.1,50,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மல்லிப்பட்டினத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 22.11.18ல் வழுதூர் இயற்கை எரிவாயு மின் நிலையம் சார்பாக ரூ.1,50,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தஞ்சை மாவட்டம் கரம்பக்குடிக்கும் அனுப்பப்பட்டது.
ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் சார்பாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2லட்சத்திற்கான் காசோலை அனுப்பப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகங்கள் சார்பில் மக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் சேகரித்த ரூ.5,13,900 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நாகபட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் இன்று (23.11. 18) அனுப்பி வைத்தார்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (சிவகங்கை மண்டலம்) ஆர்.ராஜா, பேரிடர் மேலாண் தாசில்தார் சீ.சுரேஷ்குமார், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத், பேராவூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கே.காளீஸ்வரி உடனிருந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.


You must be logged in to post a comment.