வைரவிழாவில் ஆர்ப்பரித்த பேராசிரியர் காதர் முகைதீன்…

இன்று திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்தியாவிலுள்ள முக்கியமான அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் கலைஞருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு பேராசிரியர் பேச்சு தொடக்கத்திலேயே மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கடுமையாக விமர்சித்தார் அத்தோடு நில்லாமல், அவையில் அமர்ந்து இருந்த அனைத்து கட்சிகளையும் மத்தியில் ஆட்சி புரியும் மதவாத ஆட்சியை, வரம்பு மீறிய ஆட்சியை நீக்குவதற்கும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நாட்டில் சுயாட்சி மற்றும் மத்தியில் மதசார்பற்ற ஆட்சியின் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதே சமயம் வடமாநில தலைவர்களும் பேச்சை புரிந்து கொள்ளும் வகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் இஸ்லாமிய சமுதாயத்தின் கருத்தை ஓங்கி ஒலித்த பேராசிரியரின் மன தைரியத்தை நிச்சயம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!