கடையநல்லூர் பகுதியில் ஜெயலலிதா 76வது பிறந்த தினவிழா; அதிமுகவினர் உறுதி மொழி ஏற்பு..

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே இந்நாளின் நோக்கம்; ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் உறுதி ஏற்பு..

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே நோக்கம் என்பதை மொழிந்து ஜெயலலிதா பிறந்த தினத்தில் அதிமுக சார்பில் உறுதி ஏற்கப்பட்டது. கடையநல்லூர் நகர அதிமுக 1-வது வார்டு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா குமந்தாபுரம் பகுதியில் கொடியேற்றத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வார்டு செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். வார்டு பிரதிநிதி பெரியசாமி, பொருளாளர் கிருஷ்ணன், நகர எம்ஜிஆர் இளைஞரணி துணை தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர துணை செயலாளர் ரஜினி (எ) முகைதீன் பிச்சை கொடியேற்றி வைத்தார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை தலைவர் ஜெயமாலன், நகர இளம்பெண் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டி, நகர எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வெங்கட் நடராஜ், 9 வது வார்டு செயலாளர் சந்தோஷ், 9 வது வார்டு ஐடி விங் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் 1-வது வார்டு கழக நிர்வாகிகள் ராஜா டெய்லர், கருப்பையா, லெட்சுமணன், மாடசாமி, பண்டாரம், ராஜா, அருணாச்சலம், ராமசாமி, கிருஷ்ண முதலியார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், நகர ஐடி விங் செயலாளர் விவேக், நகர ஐடி விங் இணை செயலாளர் சோழவராஜா, முன்னாள் வார்டு கழக செயலாளர் அமராவதி முருகன் மற்றும் நகர நிர்வாகிகள் வார்டு கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தோதலில் நிறுவனர் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் கழகத்தின் காவல் தெய்வம் அம்மாவின் ஆசியோடு புரட்சி தமிழர் எடப்பாடியார் காட்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே அம்மாவின் பிறந்த நாளில் நாம் எடுக்கும் சபதம் என முன்னாள் நகர துணைச் செயலாளர் ரஜினி (எ)மைதீன் பிச்சை தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!