அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி..

இராமநாதபுரம், நவ.1- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார்.  அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். 

முஹமது சதக் அறகட்டளை இயக்குனர் ஹபீப் முஹமது துவங்கி வைத்தார். 22 ஆடவர்,15 மகளிர் அணிகள் பங்கேற்றன. ஆடவர் பிரிவில் திருப்பத்தூர் ஆறுமுக பிள்ளை சீதையம்மாள் கல்லூரி, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி, அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லூரி, பரமக்குடி அரசு கலைக் கல்லூரி அணிகள் முதல் 4 இடம் பிடித்தன. மகளிர் பிரிவில் தெக்கூர் சிங்கை சித்தர் ஐயா கல்லூரி,  காரைக்குடி அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லூரி, சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லுரி அணிகள் முதல் 4 இடம் பிடித்தன. வென்ற அணிகளுக்கு  பரிசு கோப்பை  வழங்கப்பட்டது. இப்போட்டிகளை முஹமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், முஹமது சதக் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ஷேக் தாவூத், காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லுரி உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார், இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், பரமக்குடி அரசு கலை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பிரசாத் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம் ஏற்பாடு செய்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!