கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல்கல்லூரியில் “31 வது பட்டமளிப்பு விழா” அறக்கட்டளைதலைவர் முஹம்மது யூசுப் அவர்கள் தலைமையிலும்அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹாமீது இப்ராஹிம்அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.கல்லூரி டீன் முனைவர். முஹம்மது ஜஹாபர்வரவேற்புரை நிகழ் த்தினார்.கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன்கல்லூரியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.அகில இந்திய தொழில்நட்பக் கழகத்தின் ஆராய்ச்சி நிறுவன மற்றும் ஆசிரிய மேம் பாட்டு ஆணையஆலோசகர். முனைவர். திலீப் என் மால்கடே கலந்துகொண்டு 340 இளநிலை பொறியியல் மாணவர்களுக்கும் 65 முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் வெற்றி பெற்ற 14 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினாா்.
சிறப்பு விருந்தினர் தனது சிறப்புரையில் மிகவும் பின்தங்கிய பகுதியில் தமிழகத்திலேயே முதன் முதலாக இக்க ல்லூரியை உருவாக்கிய முஹம்மது சதக்அறக்கட்டளையின் கல்வி பணி பாராட்டத் தக்கது.பட்டதாரிகளாகிய நீங்கள் வேலை தேடுபவர்களாகஅல்லாமல் பல நபர்களுக்கு வேலை கொடுக்கும்
தொழில்முனைவோராக உயர வேண்டும ;மேலும் மாணவர்களின் ஆராய்ச்சி நாட்டின்வளர்ச்சிக்காகவும் மக்களின் பொருளாதாரத்தை
முன்னேற்றுவதற்கும் வழிவகை
செய்ய வேண்டுமெனவுமகூறினார்.இன்று பட்டம் பெறும் பொறியியல் மாணவர்கள் நாளைய இந்தியாவின் முன்னோடியாக விளங்கவேண்டுமெனவும் வாழ்த்தினாா்.விழாவில் சதக் அறக்கட்டளை நிறுவனங்களில்ஒன்றான முஹம்மது சதக் ஏ.ஜே. பொறியியல்கல்லூரியின் நெறியாளர். மணிவண்ணன் கீழக்கரைமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஹசன் அலி முஹம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் முஹம்மது சதக் ஹமீது பெண்கள் கலைமற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நாதிரா பானு முஹம்மது சதக் தஸ்தஹீர் மெட்ரிகுலேசன் பள்ளிமுதல்வர். நந்தகோபால் முஹம்மது சதக் சிபிஎஸ்இ முதல்வர் ஆலியா முஹம்மது சதக் தஸ்தஹீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம்; மற்றும்சைட்டக் முதல்வர் ரியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.விழாவிற்கான ஏற ;பாடுகளை கல்லூரியின் அனைத்துதுறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


You must be logged in to post a comment.