மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் – பாண்டியம்மாள் தம்பதி., சுப்பிரமணியன் கட்டிட தொழிலாளியாகவும், பாண்டியம்மாள் இல்லத்தரசியாகவும் வாழ்ந்து வந்தனர்.,இவர்களுக்கு திருமணமான நாளிலிருந்து 35 ஆண்டுகளாக குழந்தை இல்லாத சூழலில் கணவருக்கு குழந்தையாக மனைவியும், மனைவிக்கு குழந்தையாக கணவனும் அதிக அளவு பாசத்துடன் இருந்துள்ளனர்.,இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி சுப்பிரமணியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்., கணவர் உயிரிழந்த நொடி முதல் மீளமுடியாத சோகத்தில் இருந்து வந்த பாண்டியம்மாள் இன்று கணவரை நல்லடக்கம் செய்ய அவரது உடலை எடுத்து சென்ற போது நடைபெறும் இறுதி மரியாதையை செய்துவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மயங்கி விழுந்தார்.,யங்கிய பாண்டியம்மாளை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாண்டியம்மாள் உடலையும் சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர்.,ஏற்கனவே இறுதி சடங்குகள் முடிந்து சுடுகாட்டில் வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் உடலோடு பாண்டியம்மாளின் உடலையும் இணைத்தே வைத்து இறுதி மரியாதை செய்து இருவரது உடல்களையும் சேர்த்தே எரியூட்டினர்.,35 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த கணவர் உயிரிழந்த சூழலில், மனைவியும் அவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்துவிட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு, இறப்பிலும் இணைப்பிரியா தம்பதி என்ற நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.,

You must be logged in to post a comment.