ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுக்கிறது. தமுமுக தலைவர் கண்டனம் – முழுத் தொகுப்பு..

கடந்த வாரம் ஜார்கண்ட் மாநில அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை எந்த வித ஆதாரப்பூர்வமான காரணங்கள் இல்லாமல் அம்மாநிலத்தில் சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கிம் வண்ணம் தடை செய்தது.

இந்நிலையில் அத்தடையை நீக்க கோரி PFI மற்றும் அதன் தோழமை அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று தமிழகம், கேரளா இன்னும் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் வட மாநிலங்களான ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் தடையை கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தடையை கண்டித்து தமுமுக மற்றும் மனித நேய கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை ஜார்கண்ட் மாநில அரசு 1908ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 16ம் விதியின் படி தடைச் செய்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த தடை ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகவும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்துள்ள உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையாகவும் உள்ளது.

ஜார்கண்ட் மாநில பாஜக அரசு பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடைச் செய்வதற்காக குறிப்பிட்டுள்ள காரணங்கள் நகைப்பிற்குரியவையாக உள்ளன. பாப்புலர் பிரண்ட் அமைப்பிற்கும் தற்போது செயலிழந்துள்ள ஐஎஸ்எஸ் அமைப்பிற்கும் தொடர்பு உண்டு என்றும் சிரியாவிற்கு இந்த அமைப்பு ஆட்களை அனுப்பியது என்றும் இவையெல்லாம் கேரளாவில் நடைபெற்றுள்ளன என்றும் தடைக்கான காரணமாக ஜார்கண்ட் மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற இஸ்லாமிய பரப்புரையாளர் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தியதையும் தடைக்கான காரணமாக ஜார்கண்ட் பாஜக அரசு குறிப்பிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திற்கு வெளியில் நடைபெற்றதாக கூறப்படும் காரணங்களை குறிப்பிடும் தடை ஆணையில் அந்த மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு சட்டவிரோதமான எந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என்று எதனையும் குறிப்பிட இயலவில்லை. ஒரு சிறுபாபன்மை அமைப்பின் மீது அந்த அரசிற்குள்ள வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்த தடை உத்தரவு அமைந்துள்ளது.

சிறுபான்மையினரை நசுக்க வேண்டும் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை பறிக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் சின் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு முன்னுதாரணமாகவே ஜார்கண்ட் மாநில பாஜக அரசின் இந்த தடை ஆணை அமைந்துள்ளது. உடனடியாக இந்த தடை ஆணை நீக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!