இன்று சவுதி அரேபியா மற்றும் அனேக மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நோன்பு தொடங்கியது. முதல் நோன்பான இன்று சவுதி அரேபியா ஜித்தாவில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் கீழக்கரை சகோதரர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த நட்பு வட்டாரங்களுக்கான இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆர்யாஸ் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமான கீழக்கரை மற்றும் அப்பகுதி சார்ந்த மக்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சி எல்லா தரப்பு மக்களையும் ஒரே இடத்தில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருந்தது என்று கலந்து கொண்ட சகோதரர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வை கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த மூனானா என்று அழைக்கப்படும் சீனி அலி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.


Masha allah