மஹிந்திரா மற்றும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஜாவா 300 பைக் நவம்பர் 15-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் தற்போது எந்த போர்வையும் இல்லாமல் பைக்கின் ஸ்பை படம் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் டேங்கில் க்ரோம் மற்றும் மரூன் நிறத்தில் டூயல் டோன் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபிளாட்டான சீட்டும், மட்கார்டுகளில் ஜாவா 250 போல பின் ஸ்ட்ரைப் டிசைனும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்போக் வீல் மற்றும் MRF டயர்கள் உள்ளன. முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் டிரம் பிரேக்கும் இருக்கின்றன. சிங்கில் சேனல் ஏ.பி.எஸ் வைத்துள்ளார்கள். மஹிந்திரா மோஜோ-வில் இருக்கும் ட்வின் டியூப் ஃபிரேம் போல் இல்லாமல் பைக்கின் ஃபிரேம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் செக்ஷன் ஸ்விங் ஆர்ம் கொடுத்துள்ளார்கள். பழைய ரெட்ரோ ஸ்டைலை அப்படியே மீண்டும் கொண்டுவந்துள்ளார்கள்.இந்த ஜாவா பைக்கில் 293cc சிங்கில் சிலிண்டர் DOHC இன்ஜின் இருக்கிறது. இந்த இன்ஜின் 27bhp பவரும் 28Nm டார்க்கும் கிடைக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வருகிறது. இந்த இன்ஜின் BS-6 விதிமுறைகளுக்கு ஏற்ற இன்ஜின் என்று கூறப்படுகிறது. ரயால் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஜாவா 300 பைக்கை 1.50 லட்சம் ரூபாய் என்ற விலையில் எதிர்பார்க்கலாம். விலை, விற்பனை தேதி, முன்பதிவு போன்ற விவரங்கள் நவம்பர் 15-ம் தேதி வெளியிடவுள்ளார்கள்.
தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










