கீழக்கரை பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தர் ‘அத்தா’ காலமானார்

தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், செய்யது முஹம்மது தம்பி, செய்யது அசன் அலி, செய்யது சாகுல் ஹமீது, முஹம்மது ரபீக், ரஹ்மத்துல்லாஹ், செய்யது அப்துல் ரஹ்மான்ஷா ஆகியோரது தகப்பனாருமாகிய தூத்துக்குடி ஜெய்லானி தெரு ஜனாப். செ. அப்துல் ரஹீம் என்கிற அத்தா நேற்று முன்னிரவு 7.15 மணியளவில் வபாத் ஆகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். அத்தா அவர்கள் கீழக்கரை பேரூராட்சியாக இருந்த காலத்தில் பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தராகவும், அபிராமம் பேரூராட்சியில் நிர்வாக அலுவலராகவும், கீழக்கரை வெல்பேர் அசோஸியேஷனில் மேலாளராகவும் பல்லாண்டு காலங்கள் பணியாற்றியவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் வடக்கு தெரு சேகு அப்பா மையவாடியில் இன்று 14.03.17 செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 8072279497

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “கீழக்கரை பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தர் ‘அத்தா’ காலமானார்

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    அவர்களின் நிம்மதியான கப்ர் வாழ்க்கைக்காகவும், மறுமையின் ஈடேற்றதிற்காகவும்
    *ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்* எனும்
    மேன்மையான சுவர்க்கத்திற்காகவும் ,அல்லாஹ்வின் திருப்பொறுத்ததை பெறுவதற்கும் அவர்களுக்காக துஆ செய்யுங்கள்……!!!

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!