ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு ராமேஸ்வரம் கடலில் மலர் அஞ்சலி ….

காஷ்மீரில், ஸ்ரீநகர் நோக்கி 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது 350 கிலோ வெடிகுண்டு காரை தீவிரவாத கும்பல் மோதச் செய்தது. சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்தும், . காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உயிரிழந்த 38 வீரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் தீவு மாணவ கூட்டமைப்பு சார்பில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!