மெஹ்பூபா முப்தி மற்றும் இரண்டு ஜம்மு காஷ்மீர் தலைவர்களின் காவல் இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு!
கடுமையான பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போல் முன்னாள் அமைச்சரும் மூத்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஆன அலி முகமது சாகர், முப்தியின் மாமாவும் மூத்த பிடிபி கட்சித் தலைவருமான சர்தாஜ் மதானி ஆகியோருக்கும் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் காவல் கெடு முடியும் தறுவாயில் இருந்ததையடுத்து ஜம்மு காஷ்மீர்உள்துறை இந்த நீட்டிப்பு உத்தரவை காவல் முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் பிறப்பித்தது. மெஹ்பூபா முப்தி தற்போது வீட்டுக்காவலில் இருக்கிறார். சாகர் மற்றும் மதானி ஆகியோர் குப்கர் ரோடில் உள்ள அரசு குடியிருப்பில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த போது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மெஹ்பூபா முப்தி கைது செய்யப்பட்டார். பிறகு அவரது இந்த 6 மாத தடுப்புக் காவல் பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிப்ரவரி 5ம் தேதி நீட்டிக்கப்பட்டது. 8 மாதங்கள் அரசு கட்டிடங்களில் சிறை வைக்கப்பட்ட முப்தி பிறகு ஏப்ரல் 7ம் தேதி வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#arasiyalinputhiyapathai


You must be logged in to post a comment.