பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..

காஷ்மீரில் பஹல்காம் பயணிகளின் மீது நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்திலேயே நேரடியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை ஜம்மு & காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில், 26 பேர் உயிரிழந்தனர். இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரு வெளிநாட்டவர்கள் மற்றும் இரு உள்ளூர் குடிமக்களும் உள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் கடந்த காலங்களில் வாடகை வண்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தலைமை வகிக்கிறார். தாக்குதலுக்குப் பிறகு மைய அரசு நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு, பாதுகாப்பு வலையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் உள்துறை மற்றும் வெளிநாட்டு களங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!