தன்னம்பிக்கை…
ஜப்பானில் ஹிரோசிமா நகர் அணுகுண்டால் சூறையாடப்பட்ட போது, அவர்கள் எப்படி மீள்போகிறார்கள் என்று உலகமே எண்ணிக் கொண்டிருக்கையில் உலகமே ஆச்சரியப்படும் வகையில் மீண்டு வந்தார்கள். அதுதான் அம்மக்களின் தன்னம்பிக்கையை உணர்த்தியது. அந்த நிலையில்தான் இன்று கேரள மக்கள் இருக்கிறார்கள். கனத்த மழையால் சொந்தம், பந்தம், உடமைகள், உறவுகள் என அனைத்தையும் இழந்த நிலையில் தன்னம்பிக்கையோடு மீண்டு வருகிறார்கள் என்றால் மிகையாகாது. பல் வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் நிதி உதவிகள் செய்து வரும் நியைில் தற்போது அங்கு ஜாதி, மத வேறுபாடு இன்றி ஒருவொருக்கொருவர் உதவிய வண்ணம் மீண்டு வருகிறார்கள்.
“கேரளாத்துயரம்” இதை கேட்கும் போதே நம் மனம் ஏனோ உருகிவிடுகிறது. உணவு, உடை, உறைவிடமிழந்தும் அண்டை நாடுகளில் தேனீக்களாய் உழைத்து கொண்டு வந்து சேகரித்த செல்வங்களையிழந்தும் மழையிலும் வெள்ளப்பிரயத்திலும் தடுமாறி நின்ற அந்த மக்களின் கண்ணீர் தான் நம் நினைவில் நிழலாடும், என்றாலும் தன்னலமற்ற தியாக மாந்தர்களின் மனப்பூர்வ உதவிகளால் இன்று அந்த பசுந்தழை உயிர்கொண்டு எழுந்துகொண்டுள்ளது. தற்போது வெல்ஃபேர் பார்டி அமைப்பு யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த வண்ண்ம் உள்ளார்கள். அங்குள்ள ஒவ்வொருவரின் அனுபவமும் மனதை உருக்ககும் வண்ணம் உள்ளது.
தண்ணீர் வழங்கிய ஊருக்கு ரயிலில் தண்ணீர்..
ஆலப்பி மாவட்டத்தின் காயங்குளம் பகுதியில் அணைகள் யாவும் நிரம்பி வழிந்து ஊரல்லாம் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. தண்ணீர் பஞ்சம் என்று அறியாத ஊரில் மிகுதியான நீரால் வெள்ளக்காடாகி, தற்சமயம் இரயில்வண்டி மூலமாக குடிநீர் வருகிறது என்பது கண்ணீரில் வெள்ளத்தை வரவழைக்கிறது.
இல்லங்கள் நொறுங்கிவிட்டன – உள்ளங்கள் நொறுங்கவில்லை:-
மழைவெள்ள்ளத்தால் மிக கடுமையான வகையில் பாதிக்கப்பட்டிருந்தும் கூட அந்த மக்கள் நம்பிக்கை குலையாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கைப்பணிகளை மெல்ல மெல்ல துவங்க ஆரம்பித்துள்ளனர். உண்மையிலேயே அதை காணும் போது வியப்பாகத்தான் உள்ளது. சாதிமத பேதங்களை கடந்து அவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொள்ளக்கூடிய நெகிழ்வான காட்சிகளை ஆங்காங்கே காண முடிகிறது. இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவர் என அனைவருமாக கலந்து வாழக்கூடிய பகுதிகளுக்கு இன்று சென்று கண்டுவந்தோம்.
கல்விக்கே முதன்மை என்பதை நிரூபிக்கும் கேரளா மக்கள்:-
ஆழப்புழா – வெண்மணி பகுதிக்கு சென்று அங்கே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூற சென்றிருந்தோம். அங்கே வசந்தகுமார் தோழர் கூறியது தான் மிகவும் மனதை வருடக்கூடியதாக இருந்தது. அவருடைய வீட்டில் கட்டில், பீரோ,டிவி ஆகியவை அனைத்தும் உருக்குலைந்து விட்டது , “எங்கள் குழந்தைகளின் பள்ளிக்கூட பைகளும் அவர்களது நோட்டு்புத்தகங்கள் அனைத்தும் மழையில் சேதமடைந்தது தான் மிகவும் வருத்தமாக உள்ளது” என கூறினார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














