இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ம் பசலிக்கான ஆண்டு வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு குறித்த ஜமாபந்தி கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையின் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம மக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் புறப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாளும் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்து ஜமாபந்தி நிறைவு நாள் அன்று மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கப்படுகிறது. மேலும் கிராம நிர்வாக அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான அடங்கள், சாகுபடி விவரம், பட்டா மாறுதல், வறட்சி நிவாரணம், தண்ணீர் தீர்வை, சிட்டா, நத்தம் கணக்கு வருவாய் தொடர்பான பதிவேடு, கண்மாய்களின் விவரம், நிலவர் உள்ளிட்ட அனைத்து வகை பதிவேடுகள் தணிக்கை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து தீர்வு பெற்று செல்லுமாறு பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.