பத்திரிக்கை வைத்து ஜல்லிக்கட்டுக்கு அழைப்பு..

வத்தலக்குண்டு அருகே ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பயிற்சி ஜல்லிக்கட்டு அழைப்பிதழை கோவிலில் வைத்து கும்பிட்டு வீடு வீடாக கொடுத்து அழைத்தனர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுஜல்லிக்கட்டு அழைப்பிதழை விழா கமிட்டியினர்கோவிலில் வைத்து கும்பிட்டு வீடு வீடாக சென்றுகொடுத்து அழைத்தனர். அய்யம்பாளையத்தில் 300 ஆண்டுகளாக பாரம்பரியமாக ஜல்லிக் கட்டு நடந்து வருகிறது அது போல இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் 3ந் தேதி சின்னமுத்தாலம்மன் கோவில் ஜல்லிக்கட்டு நடக்கிறது அதற்கான வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி , மன்குத்து பயிற்சி உள்படபல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. விழாக்குழுவினர் கார்த்திகேயன், செளந்தர பாண்டியன், பரமேஸ்வரன், முத்துப்பாண்டி, ஜெயக்குமார், ராமநாதன், ஐயப்பன், ஹரிராஜா’ பாலமுரளி, அய்யகுட்டி, சசிகுமார் உள்பட ஏராளமானோர்கோவிலில் அழைப்பிதழை வைத்து கும்பிட்டு வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று வழங்கி அழைத்தனர் இது பற்றி கார்த்திகேயன் கூறியதாவது 300 ஆண்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடக்கிறது அலங்காநல்லூருக்கு இணையான எங்கள் ஜல்லிக்கட்டு காண்பதற்கு கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு இரு பக்கமும் காலரி அமைக்கப் படுகிறது என்று கூறினார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!