சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம்ஜல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரங்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்களது விவரங்களை sivaganga.nic.in என்ற இணையதளத்தில், குறிப்பிட்ட தேதிகளில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல்.சிவகங்கை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சனவரி முதல் மே ஆம் மாதம் வரை ஜல்லிக்கட்டு/ மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 16.01.2025 அன்று சிராவயல் ஜல்லிக்கட்டு /மஞ்சுவிரட்டு நிகழ்வும் 18.01.2025 அன்று கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

எனவே மேற்படி ஜல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் அதன் உரிமையாளர் விவரங்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்களது விவரங்களை sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு 13.01.2025 மற்றும் 14.01.2025 ஆகிய தேதிகளிலும், கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு 15.01.2025 மற்றும் 16.01.2025 ஆகிய தேதிகளிலும் பதிவேற்றம் ஆகிய தேதிகளிலும் பதிவேற்றம் செய்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!