மதுரை -கூடுதலாக சில தகுதிகளுடன் இன்று முதல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என – கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் தகுதி விண்ணப்பத்தில் இந்த ஆண்டு கூடுதலாக சில தகுதிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..சென்ற ஆண்டு 2023-ல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு விண்ணப்பத்தில் இனம், வயது, நிறம், உயரம் மட்டுமே தகுதியாக கேட்கப்பட்டது.இந்த ஆண்டு 2024 ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு பல்வரிசை, கொம்புகளின் இடையே உள்ள தூரம், வலது- இடது கொம்புகளின் உயரம், உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது.சென்ற வருடம் காளையின் உரிமையாளர், உதவியாளர் மற்றும் போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளையின் புகைப்படத்துடன் விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும் என கூறப்பட்டது.இந்த ஆண்டு அதில் சில மாற்றத்துடன் ஜல்லிக்கட்டு காளை ஒரு பக்கமாக நின்றபடி திமில் நன்றாக தெரியும்படி இருக்க வேண்டும் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது..மேலும் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

.செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!