சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு சீசன் துவங்க உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தை அலங்கரிக்கும் மணிமாலை வாங்க ஜல்லிக்கட்டின் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால் சலங்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைக்களுக்கான வண்ணமிகு அலங்காரத்தோடும் சலங்கை சத்தத்துடன் மணி மாலை கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. கண்கவரும் வண்ண வண்ண உள்ளன் நூல்களைக் கொண்டும் சப்தம் மிகுந்த சலங்கைகள் கோர்க்கப்பட்ட தயாரிக்கப்படும் இந்த மணி மாலைகள் தைப்பொங்கலில் ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் அணிவித்து அழகு பார்ப்பது ஜல்லிக்கட்டு உரிமையாளர்களின் வழக்கம். திண்டுக்கவில் தோல் (லெதர்) வாங்கி குஜராத்தில் உள்ளன்நூல் வாங்கி அரியக்குடிமணி, வெங்கநாயக்கன்பட்டிமணி, ஆறாவயல்மணி, எட்டுஅறுவைமணி , என்று பலதரப்பட்ட மணிகளை நுனுக்காக கோர்த்து கைத்தையல் மூலம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு மணியின் விலை ரூபாய் 2000 முதல் 8000 வரை விற்கப்படுகிறது இந்த மணிமாலைகளை வாங்க ஜல்லிக்கட்டு காளைஉரிமையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிங்கம்புணரிக்கு வருகை தருகின்றனர்.
இதுபோன்ற வண்ணமிகு மணி மாலைகள் அணிவித்து மஞ்சுவிரட்டு மற்றும் வாடிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடும் போது ஜல் ஜல் சப்தத்துடன் ஓடிவரும் காளையின் அழகே தான்தான் என்கின்றார்கள் ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள்.
3 தலைமுறையாக குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆண்டுக்கு 3 மாதம் மட்டுமே சூடு பிடிக்கும் சலங்கை தயாரிப்பில் ஈடுபடுவதால் தொழிலாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இரவு பகல் பாராமல் ஜல்லிக்கட்டு மணி மாலையை செய்து வருகின்றனர். மேலும் அதில் பெயர் ஊர் செல் நம்பர் பொறிக்கப்பட் தகடு அடித்து தருவதால் கானாமல் போகும் காளையை கண்டுபிடிக்க உதவும் என்கிறார்கள்.
முழுக்க முழுக்க கை தொழிலாம் தயாரிக்கப்படும் இந்த சிங்கம்புணரி மணிமாலைகளுக்கு சிவகங்கை மதுரை திண்டுக்கல் தேனி திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது கலைநயமிக்க வண்ணமயமான இந்த மணிகள் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் அமைக்கப்படுவதோடு களத்தில் நின்று விளையாடும் காளைகளின் கழுத்தில் இருந்து வரும் ஓசையே காளைக்கு வீரமும் கம்பீரம் தானா வரும்.
You must be logged in to post a comment.