இன்று (17:01/2019) நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30க்கு நிறைவு பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியில் 729 காளைகள் பங்கேற்றது. 697, மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்ற அடிப்படையில் 8,சுற்றுகள் நடத்தப்பட்டன. ஆயிரத்து 400 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 729 காளைகள் களம் இறக்கப்பட்டன. அதே போன்று 697 வீரா்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்கமறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஏ.சி., வாஷிங் மெஷின், சைக்கிள், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இன்றைய போட்டியில் 15, காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 10. காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு 2,வது பரிசும், 9,காளைகளை பிடித்த அஜய்க்கு 3வது பரிசு வழங்கப்பட்டது. களத்தில் நின்று விளையாடிய பரமபட்டி செல்லியம்மன் கோயில் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்து, கார் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வெள்ளை கொம்பன், செவலைக் கொம்பன், சின்ன கொம்பன் என்ற 3 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. ஜல்லிக்கட்டில் 40, மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனா். அவர்களில் 15 பேர் படுகாயமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கீழை நியூஸ் செய்திக்காக மதுரை நிருபர் கனகராஜ்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












