மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றது. காளைகள் முட்டியதில் 48 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறையே ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8.00 மணிக்கு துவங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 988 காளைகள் கலந்து கொண்டது. 855 மாடு பிடி வீரர்கள், முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் 848 பேர் உடல் தகுதி சோதனையில் தேர்வாகினர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. போட்டியின் போது காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். போட்டியில் 3 காளைகள், சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டன. அதிக பட்சமாக 10 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரர் என்ற பரிசை தட்டிச் சென்றார்.
ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது.
2வது பரிசு பூவந்தியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது.
3வது பரிசு மதுரை கே.கே.நகரை சேர்ந்த ப்ரியா ராஜசேகரன் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது.
10காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு, பைக் பரிசாக வழங்கப்பட்டது.
9 காளைகளை பிடித்த அஜய்க்கு 2வது பரிசும்,
8காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு 3வது பரிசும் வழங்கப்பட்டது.
செய்தி:- கனகராஜ், மதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











